தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ARDS தொண்டு நிறுவனத்தின் மூலம் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் 10 மாணவர்கள்கள ஆய்வு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இதில் ஏ.ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவனர் ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் தொண்டு நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கும், மகளீர் குழுக்களுக்கும், பள்ளி, கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், மரகன்றுகள் நடுதல், சுகாதாரம், ரத்ததானம் செய்வது, நலிவுற்ற மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் மற்றும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் உள்ளிட்ட எண்ணற்ற சேவைகளை செய்து வருவதாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த 10 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக