பாலக்கோடு கனம்பள்ளி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பாலக்கோடு பேரூராட்சி தலைவரும், திமுக பேரூர் கழக செயலாளருமான பி.கே.முரளி அவர்கள் திண்னைபிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் பெண்களுக்கு உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, பேருந்தில் இலவச பயணம், கல்லூரி பெண்களுக்கு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செய்து வருவதையும்,மேலும் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் செயல்படுத்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்த வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆ.மணி அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேருராட்சி துணைத் தலைவர் இதாயத்துல்லா, பேரூர் கிளை கழக செயலாளர்கள், வார்டு உறுப்பிணர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக