மனைவிக்காக தருமபுரி நகரப்பகுதியில் இல்லங்களுக்கே சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்த பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஏப்ரல், 2024

மனைவிக்காக தருமபுரி நகரப்பகுதியில் இல்லங்களுக்கே சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்த பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்.


தருமபுரி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் திருமதி செளமியா அன்புமணிக்கு ஆதரவாக தமிழக பாமக தலைவர் DR அன்புமணி ராமதாஸ் தனது மனைவிக்காக தருமபுரி டேனிஸ் பேட்டை, சந்தை திடல் பகுதியில் உள்ள பழக்கடை, டீ கடை, வணிக நிறுவனங்கள், இஸ்லாமிய சகோதரர்களிடம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதிகூறி மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்பகுதியில் உள்ள இல்லங்களுக்குள் நேரில் சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒரு பெண்மணி அன்போடு வழங்கிய காபியை ரசித்து குடித்தார் இதனை தொடர்ந்து பஸ் நிலையம், ஆறுமுக ஆசாரி தெரு பகுதிகளில் மனைவிக்காக மாம்பழ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad