பென்னாகரம் நகரப் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது, நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது வேட்பாளர் அவர்கள், இந்தியா கூட்டணி, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு உட்பட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார்.
அதிமுகவிற்கு பிரதமர் வேட்பாளர் இல்லை எனவும், பாஜக பாமக கூட்டணி வெற்றி பெறப்போவது இல்லை எனவும் தெரிவித்தார், மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் அரசு தான் அமையப் போகிறது என தெரிவித்தார்.
மேலும் மோடி 15 லட்சம் தருவதாக கூறினார் ஆனால் நாமம் தான் தந்தார் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவது சொன்னதை செய்து காட்டினார், எனவே மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும், வருஷம் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும். மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் எனவே, திமுக காங்கிரஸ் கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தாருங்கள் என பிரச்சார மேற்கொண்டார்
பிரச்சாரத்தின் போது, திமுக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக