தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசினர் மாணவர் விடுதியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பாலக்கோடு வட்டக் கிளை கூட்டம் வட்ட தலைவர் தமிழ்மணி தலைமையில் நடந்தது. வட்டக்கிளை செயலாளர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார்.
வட்டக்கிளை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் தலைவர் தண்டபாணி, மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், மாநில பொருளாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் உள்ளிட்டவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், 4 சதவீதம் அகவிலைப்படி வழங்கியமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், பாலக்கோடு வட்டக் கிளைக்கு நிரந்தர கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்க்கு ஒன்றிய தலைவர் குமார், மேனாள் மாவட்ட தலைவர் மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் மாதப்பன் மற்றும் வட்டக் கிளை உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் வட்டக் கிளை பொருளாளர் பால்வேதநாயகம் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக