தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஜ்ஜன அள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில கவுரவ தலைவருமான ஜி.கே.மணி, பொதுமக்களுடன் பொதுமக்களாக, வரிசையில் நின்று, சரியாக காலை 7:00 மணிக்கு, முதல் நபராக வாக்களித்தார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவது உறுதி எனவும், மீண்டும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக