நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் பாமக வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி நம்பிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் பாமக வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி நம்பிக்கை.


தர்மபுரி பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிடும், முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆறு தொகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் குறிப்பாக பெண்கள் முன்பெல்லாம் வீட்டு வேலை முடித்துவிட்டு வாக்களிக்க வருவார்கள் இந்த முறை பெண்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் உள்ளனர் மேலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உடன் கூறினார். 


உடன் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தேர்தல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி திரைப்பட தயாரிப்பாளர் சின்னசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad