தர்மபுரி நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றிட பொதுமக்கள் அனைவரும் வாக்குச்சாவடியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மோனிஷா ஆகியரின் மூத்த குழந்தையான சிறுவன் மதனீஸ்வரன் வயது 4 தன்னுடைய பெற்றோரிடம் நான் திருமாவளவனுக்கு தான் ஓட்டு போடுவேன் என்று கூறி தன்னையும் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற காரணத்தை கூறி அரை மணி நேரமாக அழுது புரண்டு அடம் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி அதிகாரிகளிடம் கேட்டு உன்னையும் ஓட்டு போட அனுமதிக்க வைக்கின்றோம் என்று சமாதானப்படுத்திய பின்பு தான் சிறுவன் அழுகையை நிறுத்தினான்.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இந்த சிறுவயதில் திருமாவளவன் மேல் இவ்வளவு பற்று உள்ளதா என்று நெகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக