ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை மிதித்து ஆடு மேய்த்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை மிதித்து ஆடு மேய்த்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி நெருப்பூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய மாதையன், இவருக்கு திருமணம் ஆகி சரோஜா என்ற மனைவியும் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. 


அதேபோல் ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் உலா வருவதும் உண்டு. இந்த நிலையில்  மாதையன் ஒகேனக்கல் பெரிய பள்ளம் என்ற இடத்தில் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த யானை திடீரென தாக்கியதில் மாதையன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் அடிபட்டு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.  


இதை வனப்பகுதியில் இருந்த சிலர் பார்த்து ஒகேனக்கல் வனத்துறைக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்ததை அடுத்து சடலத்தை மீட்க போராடியும் யானை மிகுந்த பகுதியாக உள்ளதால், முடியவில்லை. எனவே இன்று காலை மீண்டும் ஒகேனக்கல் வனத்துறை மற்றும் காவல் துறையினர் உதவியுடன் மாதையன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்னர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad