பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 நடைபெறுவதால், கர்நாடகா மாநில எல்லை ஒட்டிய தமிழக எல்லை பகுதிக்கு அருகில் 5.கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதியான பென்னாகரம் வட்டம், நெருப்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடை (கடை எண்.2891), ஏரியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடை (கடை எண்.2878) மற்றும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தினை ஒட்டிய சி.எம்.ஹோட்டல் (FL-3) மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் (FL-3A) ஆகிய இரண்டு உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் எதிர்வரும் 24.04.2024 காலை 10.00 மணி முதல் 26.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை (Poll Day – Phase – I), 05.05.2024 காலை 10.00 மணி முதல் 07.05.2024 நள்ளிரவு 12.00 மணி வரை (Poll Day – Phase – II) மற்றும் 04.06.2024 (Counting of Votes) ஆகிய நாட்களில் மதுபானங்கள் விற்பனை இன்றி செயல்படாமல் மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.
மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக