இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு 10. தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் பிற பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப் பதிவு மையம் (Facilitation Center) அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13.04.2024 பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் (வாக்குச்சாவடி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் நீங்கலாக) மற்றும் 15.04.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காவல்துறை அலுவலர்கள், நுண்பார்வையாளர்களும் (Micro- observers) மேலும் 13.04.2024 அன்று வாக்களிக்க இயலாதவர்களும் சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்குகள் செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறப்பு வாக்குப் பதிவு மையத்தில் (Facilitation Center) வாக்குப்பதிவு நிகழ்வுகளை பார்வையிட மேற்கண்ட நாட்களில் 10.தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்/அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக