தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே சுங்கரஹள்ளியில் அச்சீவர்ஸ் அகாடமி மேல்நிலைப்பள்ளி கிறிஸ்தவ சபையான எம் எம் ஐ அருட்தந்தைகளால் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத வெற்றி பெற்றனர்.
பத்தாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள் 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், 483, 482 என்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடமும், 14 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தனர். கணக்கு பாடத்தில் 6 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 3 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பில் 527, 510 என்று முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். பள்ளியின் அதிபர் அருட்தந்தை ஜான் மில்லர், பள்ளியின் முதல்வர் செல்லத்துரை வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இனிப்பு மற்றும் நூலாடை அணிவித்து பாராட்டினர்.
இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துரிதமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக