ரூ. 1000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார்; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 மே, 2024

ரூ. 1000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டார்; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட குருபரஹள்ளி வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கதிரவன் இவரது சொந்த ஊர் போ.தாதம்பட்டி, இவர் குருபரஹள்ளி கிராம நிர்வாக எல்லைக்குள் வரும் கொட்டாம் புளியனூர் கிராமத்தைச் சார்ந்த சுதாகர் என்பவரிடம் நிலத்தை சீர்திருத்தம் ஆவணம் தருவதற்காக ரூபாய் 2000 லஞ்சம் கேட்டுள்ளார்.


லஞ்சம் தருவதில் உடன்படாத சுதாகர் கிராம நிர்வாக அதிகாரி தன்னிடம் லஞ்சம் கேட்பதாக தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் இரசாயனம் கலந்த 1000 ரூபாய் நோட்டை சுதாகரிடம் கொடுத்து கிராம நிர்வாக அதிகாரித்து கொடுக்கும்படி திட்டமிட்டனர்.


திட்டத்தை புரிந்து கொள்ளாத கிராம நிர்வாக அதிகாரி கதிரவன் தென்கரைக்கோட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரூபாய் 1000த்தை சுதாகரிடம் இருந்து லஞ்சமாக பெற்றுக் கொண்ட சமயத்தில் அந்தப் பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி கதிரவனை கையும் காலமாக பிடித்தனர், லஞ்சம் பெற்று பிடிபட்ட கிராம நிர்வாக அதிகாரி கதிரவனை அருகில் உள்ள தென்கரைக்கோட்டை வருவாய் அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் லஞ்சம் பெற்று வருவாய் துறை அதிகாரி பிடிபட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad