பாலக்கோடு பிடி.ஓ. அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 மே, 2024

பாலக்கோடு பிடி.ஓ. அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி ஊராட்சி துப்பாக்கிகாரன்கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒகேனக்கல் குடிநீர் கேட் வால்வில் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் கேட்வால்வை முழுமையாக அதிகாரிகள் மூடியதால் குடிக்க தண்ணீர் இன்றி பெரும் சிரமம் அடைந்து வருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பிடி.ஓ.அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாபுசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது  ஒகேனக்கல் குடிநீர் கடைகோடி கிராமங்களுக்கும் முழுமையாக  சென்றடைவது பெரும் சிரமமாக உள்ளதாகவும், இடைப்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாகவும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி குழாய் அமைத்தும், கேட் வால்வு பகுதிகளில் குடிநீர் பிடித்து வருவதால் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக குடிநீர் சென்றடைவதில்லை, எனவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குடிநீர் கேட் வால்வு அகற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


பொதுமக்களின் திடிர் சாலை மறியலால் நகர பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad