12 - ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மாதம் மறுதேர்வு எழுத சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 மே, 2024

12 - ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மாதம் மறுதேர்வு எழுத சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர்.


12 - ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தகவல்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 85 சதவீகிதத்திற்கு கீழ் தேர்ச்சி குறைவாக பெற்ற 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடவாரியான ஆசிரியர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 85 சதவீகிதத்திற்கு கீழ் தேர்ச்சி குறைவாக பெற்ற 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடவாரியான ஆசிரியர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (15.05.2024) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தாவது:- பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 6.05.2024 அன்று வெளியானதில் 93.55 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடதலாக தேர்ச்சிபெற்றுள்ளார்கள். தொடர்ந்து, அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற செய்வது ஆசிரியர்களின் கடைமையாகும்.


12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். மாதாந்திர தேர்வு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் போது மாணவர்கள் தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள், கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து மதிப்பெண் குறைவாக பெறும் மாணவ, மாணவிகளை தொடர்ந்து கண்காணித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களை பொது தேர்வின் போது தேர்ச்சி பெற அனைத்து தொடர்பு முயற்சிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுரைகளை எடுக்க வேண்டும். 


முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் கல்வி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், இனிவரும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100% சதவீதம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் திரு.விஜயகுமார் (இடைநிலைக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மான்விழி (தொடக்க கல்வி தருமபுரி), பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad