தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், கடந்த 2023ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது உறவினரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபருடன் சிறுமி காதல் வயப்பட்டவர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2023 ம் வருடம் ஜூன் மாதம் 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வாலிபருடன் திருமனம் செய்து கொண்டு, ஆந்திரா மாநிலம் சென்று அங்கு குடும்பம் நடத்தி உள்ளார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சிறுமியை வாலிபர் கடந்த மாதம் அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகினார். கடந்த 10ம் தேதி பிரசவ வலி காரணமாக சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து சிறுமி பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக