உலக பட்டினி தினத்தில் 2000 நபர்களுக்கு மேல் உணவு அளித்த மை தர்மபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

உலக பட்டினி தினத்தில் 2000 நபர்களுக்கு மேல் உணவு அளித்த மை தர்மபுரி அமைப்பினர்.


மே 28ந் தேதி உலக முழுவதும் பசியின் நிலை அறிந்து உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தருமபுரியில் இயங்கிவரும் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் சுமார் 2000 நபர்களுக்கு இன்று உணவளித்தனர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் திரு. சதீஷ்குமார் அவர்கள் கூறுகையில், இந்த உலகத்தில் தினமும் பல கோடி மக்கள் ஒருவேளை உணவிற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். 


நாம் உண்ணும் உணவை ஒரு பருக்கை கூட வீணாக்காமல் உண்பதே நாம் செய்யும் முதல் தானம் ஆகும். பசியில் இருக்கும் ஒருவருக்கு ஒரு நாளாவது உணவு அளித்து அவரது பசியை தீர்த்து மனமகழ்ச்சி அடைவோம். மை தருமபுரி அமைப்பின் மூலம் மூன்று ஆண்டுகளை கடந்து நான்காம் ஆண்டில் தினந்தோறும் பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றோம், மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டத்தில் உலக பட்டினி தினம் அன்று 2000 நபர்களுக்கு மதியம் மற்றும் மாலை வேளையில் உணவு வழங்கினோம். 


தருமபுரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம், இண்டூர் பொன்னம்மாள் உணவகம், மை தருமபுரி அமைப்பினர் இணைந்து உலக பட்டினி தினத்தில் 2000 நபர்களுக்கு மேல் உணவளித்து பசியை தீர்த்து உள்ளோம். உணவை வீணாக்காதீர்கள் உணவை பகிர்ந்து அளிப்போம் பசியை தீர்ப்போம் மனித நேயம் காப்போம் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad