இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், விண்ணப்பிக்க தேவையான தங்களின் அனைத்து சான்றிதழ்களுடன் கடவுசீட்டு அளவு புகைப்படத்துடன் கல்லூரிக்கு நேரடியாக வந்து உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணமாக ரூ.150/- வங்கி கணக்கு மூலம் செலுத்த வேண்டும். S.C/S.T பிரிவினருக்கு பதிவு கட்டணம் இல்லை.
நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வி தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு (கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் பயின்றிருக்க வேண்டும் passed 10+2 examination with Physics/ Mathematics/ Chemistry/ Computer Science/ Electronics / Information Technology/ Biology/ Informatices Practices/ Biotechnology/ Technical Vocational subject/ Agriculture/ Engineering Graphics/ Business Studies/ Entrepreneurship.) அல்லது ITI (2ஆண்டு) படிப்பு தேர்ச்சி (10 th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology) பெற்றிருக்க வேண்டும். இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதிநாள் 20.05.2024 அன்று (மாலை 5.00 மணி) கடைசி நாளாகும்.
முதலாமாண்டு சேர்க்கை பெற உள்ள மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதலாமாண்டு இணையதள வாயிலாக விண்ணப்பிக்க 24.05.2024 (மாலை 5.00 மணி) அன்று கடைசி நாளாகும். இக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.2192/- ஆகும். கல்வி உதவித்தொகை உள்பட அரசின் அனைத்து விதமான உதவிதொகைகளும் மாணவ, மாணவிகளுக்கு பெற்று வழங்கப்படும்.
கல்லூரிக்கு வந்து செல்ல இலவச பேருந்து வசதியும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு முதல்வரின் தொலைபேசி 94429 20620 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக