தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் முதலாம் ஆண்டிலும், பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ முடித்த மாணாக்கர்கள் நேரடியாக இரண்டாமாண்டிலும் சேரலாம். அதற்கான விண்ணப்பத்தை www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாகவும், உரிய ஆவணங்களுடன் நேரடியாக கல்லூரிக்கு சென்றும் பதிவேற்றம் செய்யலாம்.
நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள், மாணவ / மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள், மிக மிக குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தருதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இக்கல்லூரியில் உள்ளன. மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேரடி இரண்டாமாண்டிற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2024 முதலாமாண்டிற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.05.2024 மேலும் விவரங்களுக்கு 9500008791 (முதல்வர்), 9080139880, 8508168390, 8333017392, 04346-265355 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நடத்தப்படும் பாடப்பிரிவுகள்
- CIVIL - அமைப்பியல்
- MECHANICAL - இயந்திரவியல்
- EEE - மின்னியல் மற்றும் மின்னணுவியல்
- ECE - மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
- COMPUTER - கணிப்பொறியியல்
- DIGITAL MANUFACTURING TECHNOLOGIES - டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் (மாணவிகளுக்கு முன்னுரிமை)
இவ்வாறு கடத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக