பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024 – 25 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024 – 25 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


கல்லூரிக் கல்வி இயக்குநரின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள்  06.05.2024 அன்று முதல் 20.05.2024 வரை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 06.05.2024 முதல் பாலக்கோடு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான  விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதள முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கும் பொருட்டு கல்லூரி மாணவர் சேர்க்கை உதவிமையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கல்லூரிக் கல்வித் துறை 24.05.2024வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


எனவே, +2 தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்கள் கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட முறைகளில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.                                                    

.எண்

பாடப்பிரிவுகள்

ஊழரசளநள

1.

பி.., தமிழ்

B.A.,Tamil

2.

பி.., ஆங்கிலம்

B.A.,English

3.

பி.., வரலாறு

B.A.,History

4.

பி.., பொருளியல்

B.A.,Economics

5.

பி.., பொது நிர்வாகம்

B.A.,Public Administration

6.

இளநிலை சமூகப்பணி

Bachelor of Social Work

7.

பி.எஸ்சி., கணிதவியல் 

B.Sc.,Maths

8.

பி.எஸ்சி., இயற்பியல்

B.Sc.,Physics

9.

பி.எஸ்சி., வேதியியல்

B.Sc.,Chemistry

10.

பி.எஸ்சி., தாவரவியல்

B.Sc.,Botany

11.

பி.எஸ்சி., விலங்கியல் 

B.Sc.,Zoology

12.

பி.எஸ்சி., கணினிஅறிவியல்

B.Sc.,Computer Science

13.

பி.எஸ்சி., உளவியல்

B.Sc.,Psychology

14.

பி.எஸ்சி., புள்ளியியல்

B.Sc.,Statistics

15.

பி.எஸ்சி., ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு

B.Sc.,Nutrition and Dietetics

16.

பி.எஸ்சி., நுண்ணுயிரியல் 

B.Sc.,Micro Biology

17.

பி.எஸ்சி., மின்னணு மற்றும் தொடர்பியல்

B.Sc.,Electronics & Communication

18.

இளவணிகவியல்

B. Com., (Commerce)

19.

இளவணிக நிர்வாகவியல்

Business Administration  (B.B.A.,)


இக்கல்லூரியில் இளங்கலை/தமிழ் பாடப்பிரிவு தவிர ஏனைய அனைத்தும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளாகும். (English Medium) மட்டும்.


இக்கல்லூரியில் மேற்குறிப்பிட்ட 19 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. எனவே, இவ்வாய்ப்பினை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாலக்கோடு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர். சி. தீர்த்தலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

  

கருத்துகள் இல்லை:

Post Top Ad