பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 மே, 2024

பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.


தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் நடமாட்டம் அறவே ஒழிக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார்  இணைந்து தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  பாலக்கோடு  போலீஸ் டி.எஸ்.பிசிந்து மேற்பார்வையில் பாலக்கோடு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர்  பாலக்கோடு பேருந்து நிலையம் மற்றும்    கடமடை ரயில்வே கேட் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் ஆய்வு செய்த போது, 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை  பறிமுதல் செய்து 2 கடைகளுக்கும்  சீல் வைத்தனர்.

மேலும் இரண்டு கடைகளுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.  கடை உரிமையாளர்கள் மீது பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வேலு, முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad