பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான மாமரங்கள், தென்னை, வாழை மரங்கள் சேதம்- நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 மே, 2024

பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான மாமரங்கள், தென்னை, வாழை மரங்கள் சேதம்- நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை.


பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான மாமரங்கள், தென்னை, வாழை மரங்கள் சேதம்- நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (55), இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மாமரங்கள், வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை  வைத்து கடும் வறட்சியிலும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகின்றார்.


தற்போது மாம்பழங்களில் மாங்காய் அறுவடைக்கு இருந்த நிலையில் இரவு முனியப்பன் தோட்டத்திற்க்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை மாமரங்களில் இருந்த மாம்பழங்களை தின்றும், 30க்கும் மேற்பட்ட மாமரங்கள், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ளிட்ட சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மாம்பழங்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.


இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் காட்டுயானைகள் வருவதை தடுக்க காட்டு பகுதிகளில் தடுப்பு வேலி, யானைப் பள்ளம், தண்ணீர் தொட்டி உள்ளிட்டவை வைக்கப்படாததால் தினமும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.


இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad