தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுளுவில் மழையின் காரணமாக நீர்வரத்து அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை நேரத்தில் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக