பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கன்கொட்டாய் வனப்பகுதியில் யானை மற்றும் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 மே, 2024

பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கன்கொட்டாய் வனப்பகுதியில் யானை மற்றும் உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம் மொரப்பூர் காப்புக்காடு சொக்கன்கொட்டாய் வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி பாலக்கோடு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது  சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்  யானை ஒன்று மர்மமாக  இறந்து கிடந்தது தெரியவந்தது.


இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் துப்பாக்கியால் சுடப்பட்டு யானை இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, யானையை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்பேரில், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 


குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை அருகே கொடக்கரை இருளர் காலனியைச் சேர்ந்த மாரப்பன் (வயது .22)  முருகன் (25)  கிருஷ்ணன் (22) மற்றும் 18 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும்  கைது செய்து விசாரித்ததில் யானையை சுட்டு கொன்றதும், உடும்புகளை வேட்டையாடிதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்த 2 நாட்டுதுப்பாக்கிகள் , அரிவாள், விலங்குகளை பிடிக்கும் கண்ணிவலைகள், டார்ச்லைட்டுகள்.  செல்போன் உள்ளிட்டவைகளை  பறிமுதல் செய்த வனத்துறையினர்


4  பேர் மீதும்  வழக்கு பதிவு செய்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad