மாரண்டஅள்ளி அருகே சினிமா பாணியில் விவசாயியை கொல்ல முயன்ற வழக்கறிஞர்,சட்டக்கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 மே, 2024

மாரண்டஅள்ளி அருகே சினிமா பாணியில் விவசாயியை கொல்ல முயன்ற வழக்கறிஞர்,சட்டக்கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் வசித்து வரும் விவசாயி கோவிந்தன் (வயது.55) இவருக்கு மாரண்டஅள்ளி அருகே முத்துகவுண்டர் காடு என்ற கிராமத்தில் 3 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளதாகவும், இவரது நிலத்திற்க்கு அருகே குளிக்காடு கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.


நிலம் சம்மந்தமாக கோவிந்தன், கோவிந்தசாமி இருவருக்கும்  கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடியற்காலை கோவிந்தன் தனது நிலத்தில் இருந்து மாரண்டஅள்ளி சந்தைக்கு செல்ல வேண்டி தனது மோட்டார் சைக்கிளில் மாரண்டஅள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.


அப்போது பொப்பிடி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் வந்த சொகுசு காரில் ஓட்டுநர் ரவியுடன் , கோவிந்தசாமி, கோவிந்தராஜ்,  ஆகியோரும், பின்னால் மினி சரக்கு வாகனத்தில் ஓட்டுநர் சாந்தகுமாருடன் | கார்த்திக், அரவிந்த், ஆகியோரும் வந்துள்ளனர். பின்னால் வந்த மினி சரக்கு லாரி கோவிந்தன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கோவிந்தன் கீழே விழுந்தார்,


கீழே விழுந்த கோவிந்தன் மீது சொகுசு கார் ஏற்றி கொல்ல வந்தபோது கோவிந்தன் நகர்ந்து கொண்டதால் சொகுசு கார் மினி சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போதும் கோவிந்தனை கொல்ல அரிவாள், கத்தியுடன் விரட்டியுள்ளனர். அங்கிருந்த தப்பிய கோவிந்தன் மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.


இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்கறிஞர் கோவிந்தசாமி (வயது. 31), சட்டக் கல்லூரி மாணவர்கள் கார்த்திக்(வயது. 24) இரவி(வயது. 31), கோவிந்தராஜ் (வயது. 44), அரவிந்த்(வயது. 27) மின சரக்கு வாகன ஓட்டுநர் சாந்தகுமார் (வயது.31) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad