வரும் கல்வியாண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தருமபுரி மாவட்டத்தில் 8 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 மே, 2024

வரும் கல்வியாண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தருமபுரி மாவட்டத்தில் 8 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சி, விமலபுரி அமலா தொடக்கப்பள்ளி, சத்துணவுக்கூட்டத்தில் பள்ளி குழைந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு சமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (31.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் 111 பள்ளிகளில் 6536 மாணவர்களுக்கு  22.06.2022 அன்று தொடங்கப்பட்டது. 15.09.2023 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு 1000 பள்ளிகளில்   55905 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 


தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்க தமிழக அரசு மூலம் அரசாணை அறிவிக்கபட்டு. தருமபுரி மாவட்டத்தில் 8 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. அதில் 901 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்றைய தினம் அமலா அரசு உதவி பெறும் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் முதலமைச்சரின் காலை உணவு வழங்க போதுமான வசதிகள் உள்ளதா என்பதையும், முதலமைச்சரின் காலை உணவு சமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு பட்டியலின்படி சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க, சத்தான உணவுகளை சமைத்து வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. அமலா அரசு நிதிவுதவி பள்ளியில் 272 மாணவர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள்.


இந்த ஆய்வுகளின்போது, மகளிர் திட்ட இயக்குனர் திரு. பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி.சுமதி, உதவி திட்ட அலுவலர்கள் திரு.சஞ்சீவிகுமார்,  திரு.முருகேசன், திரு.வெற்றிசெல்வன், திருமதி.சந்தோஷம் மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad