வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், செட்டிகரை ஊராட்சிக்குட்பட்ட நீலாபுரம் பனந்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-2025 ஆண்டில் ரூபாய் 18 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், செம்மண்டகுப்பம் ஊராட்சியில் தாட்கோ மூலம் நரிக்குறவர் மக்களுக்கு ரூ.45 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 10 இலவச வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (28.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி வட்டம், செம்மண்டகுப்பம் ஊராட்சியில் தாட்கோ மூலம் நரிக்குறவர் மக்களுக்கு ரூ.45 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 10 இலவச வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


செட்டிகரை ஊராட்சிக்குட்பட்ட நீலாபுரம் பனந்தோப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-2025 ஆண்டில் ரூபாய் 18 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் எதிர்வரும் பருவ மழையின் போது தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் பணிகளை தரமாக, விரைந்து முடித்திட வேண்டுமென ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021- 22 ஆம் நிதி ஆண்டில் பனந்தோப்பு பகுதியில் 350 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கோடை காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் பட்டுப்போன மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு நல்ல முறையில் பராமரிக்க ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


மேலும், பொதுமக்களிடம் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இந்த ஆய்வின்போது, உதவி திட்ட அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.ஷகிலா, தாட்கோ செயற்பொறியாளர் திரு.நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மா.சத்தியா, திரு.கே.ரங்கநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad