மாரண்டஅள்ளியில் மழை வேண்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி - ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 மே, 2024

மாரண்டஅள்ளியில் மழை வேண்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி - ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் உள்ள  திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நாடகம் நடத்தினால் மழை வரும் என்பது ஐதீகம். எனவே  மாரண்ட அள்ளி,சிக்க மாரண்ட அள்ளி, காளி கவுண்டர், உலகம்பட்டி, குண்டுபள்ளம், சந்திராபுரம், வேளாங்காடு, அகரம், ஆஞ்சிநேயபுரம், கல்லாகரம் உள்ளிட்ட 12 ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து மழை வேண்டி, கடந்த11 நாட்களாக மகாபாரத நிகழ்வுகளான கிருஷ்ணர் பிறப்பு, பீமன், துரியோதனன், சகுனி, ஆகிய கதாபாத்திரங்களின்  வேடங்கள் அணிந்து மகாபாரத கதைகளின் வரும் காட்சிகளை  தத்ரூபமாக நடித்து காட்டினர்.


மகாபாரதப் போரின் முக்கிய நிகழ்வான 18 ம் போர் எனப்படும்  துரியோதனன் படுகள நிகழ்ச்சி    நேற்று நடைபெற்றது. இதில்    பீமன் தனது கதாயுகத்தால்  துரியோதனனை தொடையில்  அடித்து கொன்று 18 ம் போரை நிறைவு செய்யும் காட்சி தத்ரூபாக  நடத்தி காட்டப்பட்டது. இதுவே துரியோதனன் படுகளம் ஆகும். 


இந்நிகழ்ச்சியில் திரெளபதி அம்மன் கோயில் நிர்வாகிகள், 12 கிராம ஊர் கவுண்டர்கள் மற்றும்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad