மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த இரண்டு புனித உடல்கள் நல்லடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 மே, 2024

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த இரண்டு புனித உடல்கள் நல்லடக்கம்.


தருமபுரியில் பல்வேறு சமுகபணிகளை செய்துவரும் மை தருமபுரி அமைப்பினர் ஆதரவற்று மரணிக்கும் நபர்களின் உடலை நல்லடக்கம் பணி செய்து வருகின்றனர், இன்று 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்தனர், இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார், இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. அதே போல் ஓசூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு 40 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் அடிபட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


சிகிச்சை பலனின்றி இறந்த இவரை பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாருமில்லை. ஓசூர் காவலர் மற்றும் கிருஷ்ணாபுரம் காவலர், மை தருமபுரி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், பாலச்சந்தர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 89 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். 


மை தருமபுரி அமைப்பினர் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதைகள் ஆதரவற்றோர் இல்லை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad