பாலக்கோடு, துணை மின் நிலைய பணியாளர்கள் பாதுகாப்பு , எச்சரிக்கை கருவியை பயன்படுத்தி பணிகள் - பொதுமக்கள் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 மே, 2024

பாலக்கோடு, துணை மின் நிலைய பணியாளர்கள் பாதுகாப்பு , எச்சரிக்கை கருவியை பயன்படுத்தி பணிகள் - பொதுமக்கள் பாராட்டு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை துணை மின் நிலைய  மேற்பார்வை பொறியாளர் .சுமதி மற்றும் பாலக்கோடு கோட்டம் செயற்பொறியாளர் வனிதா அவர்களின் ஆலோசனை படி, பாலக்கோடு உபகோட்டத்தில் பணி புரியும்  பணியாளர்களது  பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் விபத்தை தடுக்கும் வகையில், பணியாளர்கள், மின்கம்பத்தில், பணி செய்யும்போது மின்னழுத்தம் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் கருவியை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இப்புதிய கருவியின் மூலம் பணியாளர்களுக்கு மின் விபத்துக்கள் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கபடும் என்பதால் பணியாளர்களும், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad