இவர் பாலக்கோட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். கடந்த 15ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு வேலை முடிந்து தன்னுடன் பணிபுரியும் கனேஷ் (வயது.(32) என்பவரின் சொகுசு காரில் பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கணேஷ் காரை ஓட்டி வர தினேஷ் காரின் முன்பக்கம் இடதுபுறம் அமர்ந்து வந்தார், வெலாம்பட்டி ஏரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் சொகுசு காரின் குறுக்கே வந்ததால் கணேஷ் காரை வலது புறம் திருப்பினார் இதில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் இருந்த பணை மரத்தில் மோதியதில் தினேஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணேஷ் படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தத்தின் பேரில் கணேஷை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக