தருமபுரி‌ புதியதேசிய நெடுஞ்சாலை மண்ணரிப்பு மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பு- திணறும் அதிகாரிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மே, 2024

தருமபுரி‌ புதியதேசிய நெடுஞ்சாலை மண்ணரிப்பு மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பு- திணறும் அதிகாரிகள்.


தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு வழியாக ராயக்கோட்டை  ஓசூர் வரை புதிய  நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதியமான்கோட்டை முதல் ஜிட்டாண்டஹள்ளி வரை சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் 95%பணிகள் முடிந்த நிலையில் கனரக வாகனங்கள், சொகுசு கார், பேருந்துகள் என இயக்கப்பட்டு வருகிறது. 


கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் புதிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பக்கவாட்டிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான தரை பாலும் பகுதிகளில் 2அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். புதிய தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேற போதுமான கால்வாய்கள் அமைக்கப்படாததாலும் தரைப் பாலங்கள் மிகவும் தாழ்வாக உள்ளதாலும் சிறிய மலைக்கு கூட தண்ணீர் தேங்குவதால் அவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 


இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தரைப்பாலம் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் போதிய கால்வாய்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad