ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தர்மபுரி வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் உள்ள உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 13 .5.24 அன்று நடைபெற்றது. இப் பயிற்சியில் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவி, துணை தலைவி, கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர், நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்பிற்கு எந்தெந்த கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம் என்னென்ன படிப்பினை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என அனைத்து வழிமுறைகளும் விலக்கப்பட்டது. இப்பயிற்சியில் அளிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இம்மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் இவ்உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை மேற்கொள்வர்.
இப் பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கவிதா பொறுப்பேற்று நடத்தினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் லட்சுமி, முனியப்பன், அருண்குமார், பானு ரேகா மற்றும் ஆசிரியர்கள் சின்னராஜ், சின்னதுரை, தேன்மொழி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக