அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியுடன் சுய ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 மே, 2024

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியுடன் சுய ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு.


தருமபுரி மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் அண்மையில் வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டுச் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் அண்மையில் வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டுச் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (24.05.2024) நடைபெற்றது.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: இந்த நிகழ்ச்சியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்த 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 42 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3 அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளை பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டது. 


மேலும், சிறப்பாக தேர்வுப் பணிகளில் ஈடுபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற பாடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதார பாராட்டுகிறேன்.  இதேபோல் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் 100 சதவீத தேர்ச்சிபெற முழு முனைப்போடு பாடுபட வேண்டும். 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் சார்ந்த தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குவதோடு, மதிப்புக் கல்வியையும் வழங்க வேண்டும். மேலும், பொது அறிவை வளர்க்கும் விதத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.  தலைமை ஆசிரியர்கள் மாதந்தோறும் செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு மாணவர்களின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் உயர்த் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தை  சேர்ந்த 200 அரசுப் பள்ளிகளுக்கு மேல் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  


தருமபுரி மாவட்டத்தில எந்தவித தொழில் வளர்ச்சியும் இல்லாமல், விவசாயத்திலும் இற்கையின் ஒத்துழைப்பை நம்பியே உள்ள நிலை, கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் பெற்றோர்கள். இந்நிலையில் மாணவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல் பள்ளிகளில் சிறந்த கல்வியை பெற்று உயர்கல்வியில் சேர்ந்து, அதற்குபின் நல்ல ஒரு பணிக்கு செல்வதுதான்.  இத்தகைய சுழலில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க வேண்டும்.  எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் சிறந்த பணியில் உள்ள ஆசிரியர்கள் கல்வியுடன் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், கட்டுபாடு உள்ளிட்ட நற்பண்புகளை கற்றுத்தர வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா,  மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு.வீ.விஜயகுமார், தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி, தருமபுரி) முனைவர்.இ.மான்விழி,  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி, அரூர்) திரு.அ.இஸ்மாயில், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.மா.ரேணுகோபால் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad