பாலக்கோடு அருகே சேதமான தார்சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 மே, 2024

பாலக்கோடு அருகே சேதமான தார்சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பேரூராட்சி பகுதியில் உள்ள ஸ்துபி மைதானம் முதல் கல்கூடஹள்ளி வரை செல்லும் சுமார் 1கி.மீ தார்சாலையை குடிநீர் குழாய் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் தோண்டினர், மேலும் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து நொரம்பு மண் ஏற்றி சென்ற கனரக வாகனங்களாலும் தார்சாலை குண்டும் குழியுமாகி மாறியது.


தற்போது குடிநீர் குழாய், தார்சாலை அமைக்கும் பணிகள்  முடிந்து பல மாதங்கள் கடந்தும், தார்சாலையை சீரமைக்காததால், அவ்வழியாக அமானிமல்லாபுரம், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெல்ரம்பட்டி, கரகூர், சீரியனஹள்ளி, கோட்டூர், பெலமாரனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும்  வாகன ஓட்டிகளும், பொதுமக்ளும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி  பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.


மேலும் பாலக்கோடு பேரூராட்சி நகர பகுதியில் இருந்து புதிய தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் சாலையாக இருப்பதால் பெரும்பாலான வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தி வருவதாலும், சாலை மிகவும் குறுகலாகவும் இடநெருக்கடியாகவும் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இச்சாலையை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad