பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பீடிஒ அலுவலகம் முற்றுகை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 மே, 2024

பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பீடிஒ அலுவலகம் முற்றுகை.


தர்மபுரி மாவட்டம்  ஏரியூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு காலி குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏரியூர் பீடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் அ‌ஜ்ஜனள்ளி ஊராட்சி வீரப்பன் கொட்டாயில் சுமார் 25க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


எனவே உடனடியாக குடிநீர் மற்றும் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி காலி குடங்களுடன் ஏரியூர் பீ டி ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இதே போல் சுஞ்சலநத்தம் ஊராட்சி மூலபெள்ளூர்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தற்போது பழங்குடியினர் துறையின் சார்பில் தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் போதிய தண்ணீர் வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


எனவே உடனடியாக அவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏரியூர் பீடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து தர வளர்ச்சி அலுவலர் விமலன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனை தொடர்ந்து உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியூர் ஒன்றிய குழு செயலாளர் என் பி முருகன் தலைமை வகித்தார் மாநில குழு உறுப்பினர் இரா சிசுபாலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி மதன் மாவட்ட குழு உறுப்பினர் ஆ  ஜீவானந்தம் நாகமரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பி இளங்கோவன் ஏரியூர் ஒன்றிய குழு உறுப்பினர் எம் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர் இப் போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களோடு கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad