பருவ மழை தவறினாலும் பருவம் போகாமல் புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடி செய்ய அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

பருவ மழை தவறினாலும் பருவம் போகாமல் புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடி செய்ய அழைப்பு.


பருவ மழை தவறினாலும் பருவம் போகாமல் புதிய தொழில்நுட்ப முறையில் துவரை சாகுபடி செய்ய அழைப்பு, இது குறித்து பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி அவர்கள், கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் துவரை சாகுபடி செய்ய பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும்.


பயிர் வகையிலே துவரை பயிர் மட்டும் பருவம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறி பயிர் செய்தால் கண்டிப்பாக மகசூல் பாதிக்கும். இதனைப் போக்க, புதிய தொழில்நுட்மான நாற்று நடவு துவரை சாகுபடி முறையைப் பின்பற்றி, துவரையில் அதிக மகசூல் பெறலாம். இதற்கான பருவம் ஆடிப் பட்டம் சிறந்தது.


நாற்றங்கால் தயாரித்தல்

துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டைகோடெர்மா விரிடி போன்றவற்றில் ஏதாவது ஓன்றில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.


நடுவதற்கு சில நாள்கள் முன் இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து, கடினப்படுத்தி பின்பு நடவு செய்தல் நல்லது.  அதிக பக்க கிளைகள் உருவாகி, அதிக விளைச்சல் கிடைக்கிறது.


எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்தப் புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற முடியும் என வேளாண்மைஉதவி இயக்குநர் அருள்மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad