தருமபுரி மற்றும் அரூரில் இயங்கி வந்த பிரபல நகைகடைக்கு சீல் வைத்த போலீசார், உரிமையாளர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 மே, 2024

தருமபுரி மற்றும் அரூரில் இயங்கி வந்த பிரபல நகைகடைக்கு சீல் வைத்த போலீசார், உரிமையாளர் கைது.


தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி  சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கர் (35) கைது தருமபுரி பொருளாதார குற்றபிரிவு போலீசார் நடவடடிக்கை.


தருமபுரி மற்றும் அரூரில்  செயல்பட்டு வந்த SVS ஜூவல்லரி கடை மூடி சீல் வைக்கப்பட்டது, "பொங்கும் தங்கம் " என்ற பெயரில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் தருவதாகவும், குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் தவணை முறையில் முதலீடு செய்து வந்தால், செய்கூலி சேதாரமின்றி புதிய  நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான தீபாவளி சீட்டுக்களை நடத்தி பணம் வசூலித்து 2023 ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கடையை மூடிவிட்டு தலைமறைவானார் சபரிசங்கர்.


பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் அடுத்தடுத்து கொடுத்த புகாரின் பேரில், விசாரணையில் ஈடுபட்டு வந்த போலீசார், பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த சபரி சங்கரை கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதாகியுள்ள சபரி சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கபடவுள்ளார்.


இதனிடையே சபரி சங்கரின் மனைவி கீ்ர்த்தனா கூறும் போது, சபரி சங்கரை காதலித்து திருமணம் செய்து கொணடதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு சேலத்தில் முதலில் சிறியதாக கடை துவங்கப்பட்டதாகவும் மக்களிடையே ஆதரவு பெருகியதை தொடர்ந்து, தருமபுரி, நாமக்கல், திருச்சி, என பல்வேறு மாவட்டங்களில் SVS ஜீவல்லரி என்ற பெயரில் பதினொரு கடைகள் திறக்கபட்டு செயல்பட்டு வந்ததாகவும், தங்களது கடைகளை ரஞ்சித் என்பவரே முழு பொறுப்பையும் கவனித்து வந்ததாகவும், அவரின் கீழ் பலர் பணிபுரிந்து வந்ததாகவும், கடைகளின் எல்லாவிதமான வரவு செலவுகளையும் ரஞ்சித் உட்பட கடைகளில் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்களே கவனித்து வந்தததாகவும், அதிகளவு பணம் நடமாட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் அவர் பணத்தை சுருட்டி விட்டு சபரிசங்கரை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கிறார்.. சபரி சங்கரின் மனைவி கீர்த்தனா.. தவிர தனக்கு தெரியாமல் சேலத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணை ( வாணிஸ்ரீ) இரண்டாவதாக திருமணம் செய்து தன்னையும் ஏமாற்றியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.


கைது செய்யப்பட்டிருக்கும் சபரி சங்கரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்பு சிறையில் அடைக்க இருக்கிறது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்அடுத்தடுத்து நடக்க இருக்கும் போலீஸ் விசாரணையில் யார் யாரெல்லாம் சிக்க போகிறார்கள் என்பது தெரியவரும்..

கருத்துகள் இல்லை:

Post Top Ad