பாலக்கோடு பகுதிகளில் அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து வேளாண்மை துறை சார்பில் செயல்விளக்க பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

பாலக்கோடு பகுதிகளில் அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து வேளாண்மை துறை சார்பில் செயல்விளக்க பயிற்சி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெலமாரனஅள்ளி, ஈச்சம்பள்ளம் கிராமங்களில் வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்விளக்கம் முழு மானிய விலையில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டி மற்றும் இதர இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.


விவசாயிகள் தங்கள் தென்னை மரம், வாழை மரம் மற்றும் இதர பயிர்களில் தேனீ வளர்ப்பு செய்தால் அயல்மகரந்தச் சேர்க்கை திறன் அதிகரிப்பதனால் மகசூல் அதிகரிக்கும் மேலும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதை பற்றியும் தேனீ பெட்டி பராமரிப்பு முறைகள் பற்றியும் செயல்விளக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பணியாளர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஷ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருள்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad