பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 மே, 2024

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு.


தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  பள்ளி  வாகனங்களை ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி அவர்கள் பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்கிக் கல்லூரி வளாகத்தில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தார்.


முன்னதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு சாலையில் விபத்தின்றி வாகனங்களை இயக்குவது குறித்தும் மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்து செல்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்.


இந்த வாகன தணிக்கையில்  பாலக்கோடு, காரிமங்கலம் தாலுக்காவை சேர்ந்த 38 கல்வி நிறுவணங்களில் இயக்கப்பட்டு வரும் 304 வேன் மற்றும் பேருந்துகளில்  262 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 12 வாகனங்களில் வேககட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி,  பிளாட்பாரம், ஏர் ஹாரன் உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு வர உத்தரவிடப்பட்டது.


மேலும் தனிக்கைக்கு வராத  42வாகனங்கள் உரிய முறையில் பழுது பார்த்து வரும் ஜூன் 1ம் தேதிக்குள் ஆய்விற்க்கு உட்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன தணிக்கையில் தகுதி சான்று, காப்பீடு, பர்மிட், வரி உள்ளிட்டவைகள் மற்றும் வாகனத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


தணிக்கைக்கு கொண்டு வராமல் சாலையில் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad