தருமபுரி மாவட்டம் அரூர் சித்தேரி சாலை கீரைப்பட்டி என்னும் இடத்தில் யோகேஷ் சலூன் கடை உள்ளது இங்கு கடந்த 9ம் தேதி மாலை கௌாப்பாறையை சேர்ந்த ஓட்டுநர் இளங்கோ என்பவரது மகன் சஞ்சய் என்ற இளைஞர் முடிவெட்ட சென்றாராம் அப்போது யோகேஷ்வரன் என்பவர் நீ எந்த ஊர் என கேட்டுள்ளார் நான் கௌாப்பாறை காலனி என்றவுடன் உங்களுக்கு முடிவெட்ட முடியாது என கூறியுள்ளார் ஏன் என்று கேட்டதற்கு காலனி பசங்களுக்கு முடிவெட்ட முடியாது என கூறினாராம் இதையடுத்து சஞ்சய் இது குறித்து தனது ஊரில் உள்ள இளைஞர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
பின்னர் இது குறித்து கேட்க இளைஞர்கள் யோகேஷ்வரன் கடைக்கு சென்று கேட்டுள்ளனர் அப்போது அவரது தந்தை சென்னையன் என்பவரும் அவரது மகன் யோகேஸ்வரன் பறையர்களுக்கு முடிவெட்டமுடியாது இது காலம் காலமாக உள்ள வழக்கம் என கூறியுள்ளார்.
இது குறித்து அதிர்ச்சியடைந்த இது குறித்து பாதிக்கப்பட்டவர் அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் போலிசார். வழக்கு பதிவு செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக