தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 மே, 2024

தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம்.


தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் கடத்தூர், மலர் வணிக வளாகம், கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்றத்தின் தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன் தலைமை தாங்கினார். பாவலர் பெரு. முல்லையரசு, தமிழ்மகன் ப. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா. மதனகோபாலன் அனைவரையும் வரவேற்றார். 

கவிஞர்கள் கூத்தப்பாடி மா. பழனி, ந. முகுந்தமாதவன், கோகுல் காளியப்பன், மோ. கி. வெங்கடேசன், உதயசூரியன், பெ. கோபாலகிருஷ்ணன், இரா. சம்பத், குறள்மொழி, வெ. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். 


09-06-2024 ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுக் கூட்டம் கூட்டுவது, பொதுக்குழுக் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு படிப்பது, பாலக்கோடு வட்டத்திலும், அரூர் வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, மேலும் பலரிடம் புரவலர் நிதி பெற்று வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்வது, ஆண்டுவிழா கொண்டாடுவது, ஆண்டு விழாவில் தகடூர் கவிகள் என்னும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


கூட்டத்தில் பாவலர் பெரு முல்லையரசு அவர்கள் ரூபாய் இரண்டாயிரம் நன்கொடை வழங்கினார். மோ. கி. வெங்கடேசன், உதயசூரியன், வத்தலாபுரம் முருகேசன் ஆகியோர் புரவலர் நிதி வழங்கினர். இறுதியில் வத்தலாபுரம் முருகேசன் நன்றி நவிலக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad