செம்மநத்தம் கிராமத்தில் சாதியை விட்டு ஒதுக்கி வைத்ததால் கோயில் விழாவில் தகராறு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 மே, 2024

செம்மநத்தம் கிராமத்தில் சாதியை விட்டு ஒதுக்கி வைத்ததால் கோயில் விழாவில் தகராறு.


தர்மபுரி மாவட்டம், பேளாரஅள்ளியில் ஒரு பிரிவு மக்கள் சார்பாக வீரபத்திர சுவாமி கோயில்  திருவிழா இன்று நடைப்பெற்றது. இத்திருவிழாவிற்க்கு வேளாவள்ளி, பி.செட்டி அள்ளி, தீத்த்தாரஅள்ளி, குப்பன் கொட்டாய், பி.கொல்ல அள்ளி, தோமல அள்ளி, சீரியம்பட்டி ஆகிய 7 கிராமங்களை  கரகங்கள் எடுத்து வரப்பட்டு திருவிழா முடிந்ததும், செம்மநத்தம் கோயிலில் இருந்து கரகங்கள் பூஜை செய்து மீண்டும் சொந்த கிராமங்களுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு நடைப்பெற்றது.

அப்போது வேளாவள்ளியை சேர்ந்த ராஜேந்திரன் குடும்பத்தினரின் கரகத்திற்க்கு இறுதி வரை  பூஜை செய்யாமல்  இருந்துள்ளனர். இதனை  ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டபோது உரிய பதில் அளிக்காததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டது.


இது குறித்து ராஜேந்திரன் மகன்  குமார் கூறுகையில் எனது மாமனார் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாகவும். சாமியை தொட்டால் கையை வெட்டுவேன் எனவும், திருமணம், துக்க நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ள கூடாது என தடைவிதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் நேரில் சென்று  விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad