பாலக்கோடு அருகேயுள்ள பனந்தோப்பு கிராமத்தில் ஸ்ரீ புள்ள முனியப்பன் கோவிலில் முப் பூசை திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 மே, 2024

பாலக்கோடு அருகேயுள்ள பனந்தோப்பு கிராமத்தில் ஸ்ரீ புள்ள முனியப்பன் கோவிலில் முப் பூசை திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பனந்தோப்பு கிராமத்தில்  ஸ்ரீ புள்ள முனியப்பன் கோவில் திருவிழா பாலக்கோடு மேல்தெரு, பனந்தோப்பு, வாழைத்தோட்டம், எர்ரகுட்டஅள்ளி, அமுதம் காலனி, தண்டகாளன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100 வீட்டு பங்காளிகள் குடும்பம் ஒன்றினைந்து முனியப்பன் சுவாமிக்கு ஆடு, கோழி, பலியிட்டு முப்பூசை செய்து விழாவினை தொடங்கி வைத்தனர்.


அதனை தொடர்ந்து முனியப்பன் சுவாமிக்கு பல்வேறு திரவங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார், இதை அடுத்து சுவாமிக்கு பக்தர்கள் கிடா, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழாவில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர்  கே.பி.அன்பழகன். முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொ.மாதப்பன் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் திராளக கலந்து கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad