மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைத்து வீணாகும் குடிநீர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 மே, 2024

மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைத்து வீணாகும் குடிநீர்.


தருமபுரி மாவட்டம். மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம் சாலையில் காவல் நிலையம் முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உடைந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாகி வருகிறது.


இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கடந்த 3 மாதமாக யாரும் கண்டுகொள்ளவில்லை, கோடை வறட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்நேரத்தில் வீணாகும் குடிநீர் கண்டு பொதுமக்கள் வேதனையடைந்து வருகின்றனர்.


மாவட்ட ஆட்சியர் குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையிலும், குடிநீர் பற்றாக்குறையை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad