தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள கௌரிசெட்டிபட்டி என்னும் இடத்தில் இன்று மாலை பென்னாகரத்தில் இருந்து பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ராமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெமினி மகன் முனியப்பன் (30) என்பவர் படுக்காயம் அடைந்தார்.
உடனடியாக அங்கிருந்து அவர்கள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வந்து பார்த்ததில் இறந்து கிடந்தது தெரியவந்தது . உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக