புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட களஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 மே, 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட களஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2024-25- சார்ந்து   நடைபெற்று வரும்  15  வயதுக்கு மேற்பட்ட  முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியும் கணக்கெடுப்பு பணி சார்ந்து 15.05.2024 இன்று மாநில பள்ளி சாரா  மற்றும் வயது வந்தோர் இயக்ககத்தின் இணை இயக்குனர் பொன் குமார்  அய்யா அவர்கள், முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் திருமதி ஜோதிசந்திரா, உதவி திட்ட அலுவலர் இரவிக்குமார் அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து தருமபுரி ஒன்றியம் கொட்டாய்மேடு காலனி, A. கொல்லஹள்ளி  மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியம் அவ்வை நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில்   களஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


இந்நிகழ்வில் இணை இயக்குநர் அவர்கள் கண்டறியப்பட்ட கற்போர்களிடம் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார் இந்நிகழ்வில்  வட்டார வளமைய மேற்பார்வையாளர்,  ஆசிரியர் பயிற்றுநர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad