தீபா சில்க்ஸ், மை தருமபுரி, மாருதி ரத்த வங்கி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 மே, 2024

தீபா சில்க்ஸ், மை தருமபுரி, மாருதி ரத்த வங்கி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.


தருமபுரி தீபா சில்க்ஸ், மை தருமபுரி அறக்கட்டளை, மாருதி ரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாம் தீபா சில்க்ஸ் துணிக்கடையில் நடைபெற்றது. இந்த முகாமில் 40 குருதி கொடையாளர்கள் ரத்ததானம் கொடை வழங்கினர். பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கியது பெருமைக்குரியதாக இருந்தது. இரத்ததானம் அளித்த அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் தீபா சில்க்ஸ் சார்பாக பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.


இந்த முகாமிற்கு முன்னிலையாக தீபா சில்க்ஸ் உரிமையாளர் சம்பத் அவர்கள், சிறப்பு விருந்தினராக தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் அவர்கள், சிறப்பு அழைப்பாளராக தருமபுரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்தோஷம் அவர்கள், மாருதி ரத்த வங்கி நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மை தருமபுரி அமைப்பின் சமூக சேவகர் தமிழ்செல்வன், அருணாசலம், முஹம்மத் ஜாபர், சண்முகம், அருண் பிரசாத், எண்ணங்களின் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தகடூர் தம் பிரியாணி விஸ்வநாதன்,இரத்த வங்கி சார்பாக ஸ்வாதி, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad