குழந்தைத் திருமணமில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் - மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 மே, 2024

குழந்தைத் திருமணமில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் - மாவட்ட ஆட்சியர்.


குழந்தை திருமணத்தை  ஆதரிப்பவர்கள்  மீது கடுமையான தண்டனை  பாயும் என்றும், அவ்வாறு நடைபெறும் திருமணங்களை நடத்துவோர் மீது  இலவச உதவி எண்களில் புகார்  தெரிவிக்கலாம்.


இந்திய சட்டப்படி குழந்தை திருமணத்  தடைச் சட்டம் (Act ) 2006ன் படி பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு  கீழும்,  ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த ஒரு திருமணமும்  பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் திருமண தடைச்சட்டம் (Act ) 2006ன் படி  சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும்.  குழந்தை  திருமணத்தால்  பெண் குழந்தைகள் உடல்  ரீதியாகவும்  மனரீதியாவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  இதனால் இக்குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றிய பிரச்சனைகளும், மற்றும் இதர பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமை இழந்து பாதிக்கப்படுகிறார்கள்.


குழந்தை திருமண தடைச்சட்டம் (ACT) 2006-ன் படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், இத்திருமணம் நடைபெற உதவி செய்த நபர்கள், அமைப்புகள், திருமண தரகர்கள் ஆகிய அனைவரும் குற்றம் செய்தவராக கருதப்பட்டு அவர்களுக்கு    2 வருடங்கள் கடும் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வகை செய்யப்பட்டு உள்ளது. குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும் நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.


குழந்தை திருமணம் குறித்த புகார் செய்ய 1098, 1077 மற்றும்  181 முதலிய இலவச உதவி எண்களை அழைக்கலாம்.  குழந்தை திருமணம் குறித்த புகார் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்ற விவரம்  தெரிவித்துப்படுகிறது.


இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad