சித்தேரி, ஜி.டி.ஆர்‌ மாதிரி மேல்நிலைப்பள்ளியில்‌ புதிய மாணவர்‌ சேர்க்கை சிறப்பு முகாம்‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 மே, 2024

சித்தேரி, ஜி.டி.ஆர்‌ மாதிரி மேல்நிலைப்பள்ளியில்‌ புதிய மாணவர்‌ சேர்க்கை சிறப்பு முகாம்‌.


தருமபுரி மாவட்டம்‌, சித்தேரி அரசு பழங்குடியினர்‌ நல உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில்‌ 30.05.2024 அன்று கல்வி ஆண்டு 2024-2025க்கான புதிய மாணவர்‌ சேர்க்கை சிறப்பு முகாம்‌ பள்ளி வளாகத்தில்‌ நடைப்பெற்றது. 


இம்முகாமில்‌ 87 மாணவர்கள்‌ மற்றும்‌ 63 மாணவிகள்‌ உட்பட 150 பேர்‌ புதிதாக சேர்ந்துள்ளனர்‌. பழங்குடியினர்‌ நல இணை இயக்குநர்‌ திரு.5.சுரேஷ்குமார்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்ற இம்முகாமில்‌ மாவட்ட பழங்குடியினர்‌ நல திட்ட அலுவலர்‌ திரு.பெ.ச.கண்ணன்‌, சென்னை லயோலா கல்லூரியின்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ திரு.காளீஸ்வரன்‌, பழங்குடியினர்‌ நல உதவி இயக்குநர்‌ (பணி ஓய்வு) திரு.கி.வைரமணி, தலைமையாசிரியர்‌ திரு.கா.லோகநாதன்‌, பழங்குடியினர்‌   நல   தொடக்க/நடுநிலை/உயர்நிலை/   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்‌, 5142 தலைவர்‌ திரு.அன்னப்பன்‌, PTA தலைவர்‌ திரு.வடிவேல்‌ உள்ளிட்ட 400-க்கும்‌ மேற்பட்ட பெற்றோர்கள்‌ மற்றும்‌ மாணவ- மாணவியர்‌ கலந்துக்கொண்டனர்‌. விழாவின்‌ நினைவாக பள்ளி வளாகத்தில்‌ மரக்கன்றுகள்‌ நடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad